Thursday, 9 January 2014

நான் கடந்த 2013

காலம் காலமாக தமிழ் பஞ்சாங்கமும் நாட்காட்டிகளையும் பார்த்து வளர்ந்த மரபினர்கள், மேற்கத்திய கலாச்சாரத்தின் வழி மாறினோம். இன்றைய தலைமுறை குழந்தைகள் எத்தனை பேருக்கு தமிழ் மாதங்களின் பெயர்கள் அத்துப்படி! உலகமயமாகி வரும் சமுதாயத்தில் நமது கலாச்சாரத்தையும் மனதில் நிறுத்தி, அடுத்தவரின் கலாச்சாரத்தின் நல்லவைகளை ஏற்று வாழ்தல் சாலச்சிறந்தது. அதுவே எதார்த்தம்!




2013 என் பார்வையில் 
மாயன் காலண்டரின் முடிவின் படி 2012 ல் உலகம் அழிந்துவிடும் என்ற வதந்திகளுக்கிடையே பலரின் பல எதிர்பார்ப்புகளுக்கிடையே 2013ல் புகுந்தோம். சற்றும் எதிர்பாராத நிலையில் பற்பல மாற்றங்களை 2013 தந்தது; எனக்கு மட்டுமல்லமால் நாம் அனைவருக்கும்.

2013ன்  கடைசி பாதியில் இயற்கை விஞ்ஞானி ஐயா.நம்மாழ்வார், நெல்சன் மண்டேலா அவர்களின் மரணம் முதல் டெண்டுல்கரின் ஒய்வு வரை நாம் அனைவரையும் சோகத்தில் ஆழ வைத்த நிகழ்வுகள் ஒருபுறம் இருக்க நாம் அனைவரும் வியக்கும் வண்ணம் பெரும் மாற்றம் நிகழ்த்தி ஆம் ஆத்மி கட்சியை ஆட்சி அமைக்க வைத்த டெல்லி மக்கள் மறுபுறம். உலகளவில் சிரியா மக்கள் சந்தித்துக்கொண்டிருப்பது உச்சக்கட்ட கொடுமையான நிகழ்வு. இப்படி மிகுதியான புரட்சிகளை கண்டது 2013 என்பதில் மாற்றுகருத்து இருக்க முடியாது.

நானும் 2013ம் 
எனது வாழ்வில் 2013 ஒரு எதிர்பாராத மாற்றம் ஏற்படுத்தியது. திரை கடல் ஓடி திரவியம் தேட ஒரு வாய்ப்பு தந்தது இந்த வருடம். "Nothing comes for free". சற்றும் எதிர்பாராத தருணமே ஒழிய ஆனால் அது  தொடர்பாக நானும் என் நண்பர்களும் எதிர்கொண்ட சவால்களும், கற்ற பாடங்களும்  அதிகம்.

நம் அருகில் இருப்பதினுடைய அருமை நமக்கு அதை விட்டு விலகிச்சென்ற பிறகு தான் விளங்கும். வீட்டில் இருக்கும்வரை குடும்பத்தினரும், சூழ்ந்திருக்கும் வரை நண்பர்களும் பெரிதாக தெரிவதில்லை. ஆனால் கடல் கடந்து சென்ற பிறகுதான் தோல் சாய உறவுகளும், மார்தட்ட தோழமைகளும் பெரிதாக தெரிகிறது. இன்ப துன்பங்களை பங்கெடுக்க முடியாதபடி ஊனமாகிவிடுகிறது நம் மனது. எனினும் இது போன்ற புரிதல்களுக்கு மாற்றம் இன்றியமையாததாகிறது.

நான் கற்றவை 
ஒவ்வொரு நிமிடமும் ஒன்றை நமக்கு சொல்லத்தான் துடிக்கின்றது. ஒரு கணம் அதை நாம் மறந்தாலோ மறுத்தாலோ, நிறைய அனுபவங்களை தவற விடுகின்றோம்.

ஆண்டின் முற்பாதியில் எனது கல்லூரி வாழ்வு எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தது. எனக்கு வயதில் இளையவர்களான விடுதி தோழர்களுடனான நட்பும் அவர்களிடமிருந்து  கற்றுக்கொண்டதும் என் வாழ்வின் மறவா பாடங்கள். மறுபுறம் வகுப்பு தோழமைகள் என் வாழ்வின் மறவா சுவடுகள். சுற்றுலா முதல் என் விடை பிரியா நாள் வரை என்னை நெகிழ்ச்சியில் ஆழ வைத்தவர்கள் அவர்கள். இவர்களே நான் ஈட்டிய செல்வம். 

ஆண்டின் பிற்பாதி மேற்கத்திய நாட்டில் செலவிட நேர்ந்தது. புதிய  வானம், புதிய  பூமி என்ற வாலியின் வரிகளை நான்  பாடிய தருணமும் நிகழ்ந்தது 2013. நிழல் வேறு நிஜம் வேறு என்பது போல் நாம்  நினைத்துக்கொண்டிருக்கும் மேற்கத்திய கலாச்சாரம் முற்றிலும் தவறு. இங்கிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம். நம் நாட்டைப்பற்றியும், தமிழ் மொழி பற்றியும் வியந்து பாராட்டிய மற்ற நாட்டவர்களையும் சந்திக்க வைத்தது இந்த ஆண்டு. மொழி, மதம், இனம் பாகுபாடின்றி ஈட்டிய நண்பர்கள், நொடிப்பொழுதும் சந்தித்த சவால்கள் என அனைத்தும் என் வாழ்வின் பாக்கியம்.

இது தவிர ஆண்டு முழுவதும் என் பின்புலம் உறுதுணையாக இருந்தது என் குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்கள். அவர்களின் பிரிவு முக்கியமாக விழாக் காலம் சமயம் என்னை வாட்டியது. அது தவிர நான் கடந்த அனைத்திற்கும் என் PSG ஆசிரியர்கள் போற்றுதலுக்குரியவர்கள்.

கடந்த வருடம் பல வழியில் எனக்கு உதவி செய்த, என் வாழ்வில் பங்கெடுத்த, உரசிச்சென்ற அனைவருக்கும் "நன்றி".

விழிப்புடனும் நம்பிக்கையுடனும் 2014
2014 வருடத்தை பெரும் ஆரவாரத்துடன் வான வேடிக்கைக்கொண்டு வண்ணமயமாக தொடங்கி இருக்கின்றேன். ராசி, ஆண்டு பலன் தவிர்த்து பல கனவுகளுடனும், அதனை எதிர் கொள்ளும் உத்வேகத்துடனும் நான் காத்திருக்கிறேன்! பாராளமன்ற தேர்தலை எதிர் கொண்டிருக்கும் இந்தியாவிற்கு எவராயினும் ஊழலற்ற நல்லதொரு மக்களாட்சி அமைய வேண்டும் என்ற ஆசை ஒரு சராசரி குடிமகனாக  என்னுள்ளும் குடிகொண்டுள்ளது. உலகளவில் சண்டை சச்சரவின்றி அமைதி நிலைத்திடவும் என் வேண்டுதல்கள்.

கடந்த பாதைகள் எவ்வாறாகினும் வரும் வருடம் வசந்தம் தரும் என்ற நம்பிக்கை கொள்வோம். பல சவால்களை எதிர்நோக்கி அதனை எதிர்கொள்ள சக்தியையும் வேண்டி சாதனை புரிய ஒவ்வொருவரும் முனைவோம்!

வாழ்த்துக்களுடன் கௌதமன் ஜெயபால் !

15 comments:

  1. samaaaaaa ji gethu pongaaaaaaaaa

    ReplyDelete
  2. Kadantha pathaiyil ulla suvadugal nandraga eduthuraikka pattullana......

    ReplyDelete
    Replies
    1. நன்றி பெரிச்சியப்பன் ! :)

      Delete
  3. You deserve a praise for choosing to write in Tamizh! And, very well written.. Thumbs up! :)

    ReplyDelete
    Replies
    1. Thank you! It was actually very natural and easy for me in writing this post and a sense of pride too. With God's grace, I'm looking forward to write a lot like this.

      Delete
  4. Nalla iruku boss :) melottama solitega yathirparpu adithagama aedichu padikumpothu

    ReplyDelete
    Replies
    1. Nandri Arjun! :) I can't forget our short but wonderful room experience! Room cricket, poster dreams and in between these our exam preparations! unforgettable times! And especially you made me to see Vijay TV's OFFICE serial. And because of you i got addicted to it and I am still following the serial. :P

      Delete
  5. நம் அருகில் இருப்பதினுடைய அருமை நமக்கு அதை விட்டு விலகிச்சென்ற பிறகு தான் விளங்கும். வீட்டில் இருக்கும்வரை குடும்பத்தினரும், சூழ்ந்திருக்கும் வரை நண்பர்களும் பெரிதாக தெரிவதில்லை. ஆனால் கடல் கடந்து சென்ற பிறகுதான் தோல் சாய உறவுகளும், மார்தட்ட தோழமைகளும் பெரிதாக தெரிகிறது. இன்ப துன்பங்களை பங்கெடுக்க முடியாதபடி ஊனமாகிவிடுகிறது நம் மனது. எனினும் இது போன்ற புரிதல்களுக்கு மாற்றம் இன்றியமையாததாகிறது.

    Touching Lines. I know the feel.

    ReplyDelete
    Replies
    1. I know buddy. There are lot of untold feelings about those who are staying abroad. Cheers! :)

      Delete
  6. wow super Gowmsky...........

    ReplyDelete