Thursday, 21 June 2012

நேர் நேர் தேமா (2)

தொடர்ச்சி..

 
திரு. வைரமுத்து 
வைகறை மேகங்கள் புத்தகம் பதினேழு வயதில் எழுதப்பட்டு பத்தொன்பது வயதில் வெளியிடப்பட்டது குறித்து கேட்டபோது..
"வைகறை மேகங்கள் புத்தகத்தை நான் அச்சிட்டது என் சக்திக்கு மீறிய விஷயம் தான். ஆனால் என் சக்தி இவ்வளவுதான் என்று ஏன் திட்டமிட வேண்டும்? ஏன் நம்மை நாம் குறிக்கிக் கொள்ள வேண்டும்? ஏன் சக்தியின் அளவு இவ்வளவுதான் என்று முடிவு செய்ய நாம் யார்?"

நடிகர் திரு. சிவகுமார்
"வாழ் நாள் முழுக்க டீ, காபி சாப்பிட மாட்டேன்.பீடி, சிகரெட் குடிக்க மாட்டேன்.சாராயம் சாப்பிட மாட்டேன். சூதாட மாட்டேன். விலை மாதர்களோடு தொடர்பு வச்சுக்க மாட்டேன்னு காந்தி செய்த சத்தியம் மாதிரி எங்க அம்மாவுக்கு சத்தியம் பண்ணிக் கொடுத்திட்டு மெட்ராசுக்கு  பஸ் ஏறுனேன்.இன்னைக்கு வரைக்கும் அதை காபாதிட்டு வர்றேன். நன் டீ, காபி குடிச்சு நாப்பத்தி நாலு வருஷம் ஆச்சு"
என்று கூறியவரின் வரிகளை படித்த பிறகு முன்னுரையில் கோபி எழுதிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தது..
"எழுதுவது கோபிநாத்-ஆக இருக்கட்டும்
படிப்பவர்கள் காந்தியாக இருங்கள்"

வைரமுத்து, சிவக்குமார் ஆகிய இருவரின் நேர்காணலும் வியக்க வைத்தது. அதில் தேடிப்பிடுது இந்த இரண்டையும் எழுதிஇருக்கிறேன்.

திருமதி. சின்னப்புள்ளை 
தமிழகத்திலிருந்து சேவைக்கான "சக்தி புரஸ்கார்" விருது வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் பெற்றிருக்கிறார். இவரைப் பற்றி இதுவரை கேள்வி படாமல் இருந்தது எனக்கு சங்கடமாக இருந்தது. தவறு என்னுடையது. மிகவும் எளிமயான மனிதர் போலும்.

தோழர் திரு.நல்லக்கண்ணு 
இப்படியும் எளிமையான மனிதர் இருக்க முடியும் என்றால் அது அதிசயம் தான். "அரசியல் அதிசயம்" என்று தலைப்பு வைத்தது மிகவும் ஏற்புடையது! :)

திரு. சி.கே.ரெங்கநாதன் - கெவின் கேர் நிறுவனம்
"வித்தியாசம் இல்லாத எதுவும் இன்று விலை போகாது"
-இன்றைய கால தேவையும் கிரியேடிவிட்டியின் அவசியமும்.

திரு.அஜித்
"வாழு வாழ விடு"
- தல! தல தான்! ரொம்ப கஷ்ட பட்டார் போல !

எழுத்தாளர் திரு. ஞானி & கலைஞர் மு. கருணாநிதி 
ஒட்டு மொத்த நேர்காணல்களும் சுவாரசியம்!

ஆக "நேர் நேர் தேமா" மூலம் ஒரு பத்து மணி நேர தொலைகாட்சி தொகுப்பை புத்தகத்தின் வாயிலாக அழகாக கொண்டு சேர்த்திருக்கிறார் கோபிநாத். ஒரு புத்தகம் படித்த களைப்பே தெரியவில்லை. குறிப்பாக பாலச்சந்தர், சிவக்குமார், பி.டி.உஷா, கலைஞர் போன்றவர்களிடம் நிகழ்ச்சி நடந்தேறிய விதங்களை அழகாக சொல்லி நம்மை அந்த இடத்திற்கே அல்லது அந்த தொடரை தொலைகாட்சி பெட்டியில் காண்பிப்பது போன்று எடுத்து சென்றுள்ளது பாராட்டுக்குரியது.   
இது ஒரு புத்தகம் அன்று! Picturization of Case Studies of Successful Persons என்று சொல்லலாம்! Worth-full book to read!

No comments:

Post a Comment