கவிதை என்று அவசரப்பட்டு போட்டுட்டேன்... மனிச்சிடுங்க..
எனக்கு தோன்றியதையெல்லாம் எழுதறேன் இங்கே உங்களுக்காக!
விமர்சனம் அவசியம்..!
இரண்டு மாதங்கள் முன்பு வரை புத்தகம் மீதோ எழுத்து,கவிதை மீதோ ஆர்வமே இல்லாமல் வாழ்க்கையில் பொழுது போக்கு என்று உருப்பிடியாக எதுவும் இல்லாமல் இருந்தேன்.
நான் வாழ்க்கையை அனுபவிக்காமல் போய்விட்டேனோ என்ற சிந்தனை…
கௌதம புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் தோன்றியது போல் பெரிதாக இல்லாவிடிலும் …
இந்த கௌதமனுக்கு ஒரு சிறிய அளவு ஆர்வம் குடியேறியது..
காரணம்.. தாக்கம்.. என் நண்பர்கள் சிலரை பார்த்த பின்பு தான்..
குறிப்பாக தோழி
ஜைதூன் பைரோஸ் ஒரு காரணம்..
அந்த தோழியின் பதிவுகள்.. கவிதைகளாக.. உணர்வுகளின் வெளிப்பாடுகளாக..
நன் முதல் ரசித்த கவிதை அவர்களது கவிதை தான்.. நன்றி தோழி..!
அந்த தோழியையும் சேர்த்து இன்னும் சில நண்பர்களின் புத்தகம் படிக்கும் பழக்கம் என்னையும் ஈர்த்தது..
ஓரளவுக்கு படிக்க ஆரம்பித்து இருக்கிறேன்..
இந்த பயணம் தொடர வேண்டுகிறேன்.!